Laut IMD

வங்கக்கடலில் உருவாகி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள 'முரசு' புயல் தற்போது ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த புயலுக்கு 'முரசு' என்ற பெயர் எப்படி Warum?

இந்தப் பெயரை இந்தியா ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது. தற்போது அந்தப் பெயர் பயன்படுத்தப்படும் வரிசை வந்ததால், வங்கக்கடலில் உருவான புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Was ist los? Was ist los mit dir? புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை Was ist los? Was ist los?

'முரசு' என்ற பெயரைப் பரிந்துரைத்தவர் யார்?

கர்நாடக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் புவியரசன், தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றியபோது 'முரசு' என்ற பெயரைப் பரிந்துரைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளியில், புயல்களுக்குப் பெயர் வைப்பதற்கு உலக வானிலை அமைப்பு சில வழிமுறைகளை வகுத்துள்ளதாகக் கூறுகிறார்.

அதன்படி, பரிந்துரைக்கப்படும் பெயர்கள் அரசியல், அரசியல் தலைவர்கள், மத நம்பிக்கைகள், கலாசாரம், பாலினம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாதவையாக இருக்க வேண்டும். உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையிலோ, முரட்டுத்தனமான அல்லது கொடூரமான பொருளைத் தரும் வகையிலோ பெயர்கள் இருக்கக் கூடாது. பெயர்கள் சுருக்கமாகவும் எளிதில் உச்சரிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதிகபட்சம் எட்டு எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெயரின் உச்சரிப்பும் ஒலிப்பதிவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளின் அடிப்படையில்தான் 'முரசு' என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்கிறார் புவியரசன்.

Ende von அதிகம் படிக்கப்பட்டது

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பழங்காலத்தில் மன்னர் ஆட்சிக் காலத்தில் ஒரு செய்தியைப் பொதுவெளியில் மக்களுக்கு செய்திகளை தெரிவிப்பதற்கு முரசு பயன்படுத்தப்பட்டது. முக்கியமான அறிவிப்புகளையும், பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளையும் அறிவிப்பதற்கான கருவியாக அது இருந்தது. இதனால், மக்களுக்குப் பரிச்சயமானதும் 'முரசு' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டதாக அவர் விளக்குகிறார்.

'முரசு' மட்டுமின்றி, வேறு சில பெயர்களையும் தாங்கள் பரிந்துரைத்ததாகப் புவியரசன் தெரிவித்துள்ளார். 'ஏர்', 'கலப்பை' ஆகிய பெயர்களையும், கடல் மற்றும் மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடைய 'நாவாய்', 'படகு' ஆகிய பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'திருக்கை' என்ற மீன் பெயரையும் பரிந்துரைத்ததாகக் கூறியுள்ளார்.

தாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் இருந்து 'முரசு' என்ற பெயர் பட்டியலில் இடம்பெற்றதாகப் புவியரசன் தெரிவித்துள்ளார். இந்தியா பரிந்துரைத்த இந்தப் பெயர், சர்வதேசப் பட்டியலில் இடம்பெற்ற பின்னர், வரிசைப்படி தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

Laut AFP über Getty Images

Was ist los?

வங்கக்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்படுகிறது.

உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் வெப்பமண்டலப் புயல்கள் குழு இந்தப் பெயரிடும் நடைமுறையை ஒருங்கிணைக்கிறது.

இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, Mehr als 13 Monate இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகள் ஒவ்வொன்றும் தலா 13 Jahre பரிந்துரைத்துள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து 169 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

13 Jahre alt செய்து இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது வெப்பமண்டலப் புயல்கள் குழுவின் பணி. அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைப்படி, வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒதுக்கும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் உள்ளது. இதற்கான பணியை டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் மேற்கொள்கிறது.

பெயர்கள் எந்த வரிசையில் Was ist los?

பட மூலாதாரம், RSMC

13 Jahre alt, அந்த நாடுகளின் ஆங்கிலப் பெயர்களின் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டின் 13 Jahre alt வரிசையில் இடம்பெற்றுள்ளன. 13. Monat. ஒவ்வொரு நெடுவரிசையிலும் வங்கதேசம் பரிந்துரைத்த பெயரில் தொடங்கி, ஏமன் பரிந்துரைத்த பெயர் வரை வரிசையாகப் பயன்படுத்தப்படும். ஒரு நெடுவரிசையில் உள்ள பெயர்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட பிறகு அடுத்த நெடுவரிசைக்குச் செல்லப்படும்.

உதாரணமாக, முதல் நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'நிசர்கா' என்ற பெயரைத் 'கதி' என்ற பெயர் வருகிறது. 'நிவார்', மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'புரேவி' எனத் தொடர்கிறது.

அடுத்தடுத்த புயல்களுக்குப் பெயரிடும் வரிசையிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போதைய பட்டியலின் மூன்றாவது நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'முரசு' இடம்பெற்றிருந்தது. எனவே, இந்தப் புயலுக்கு 'முரசு' என்ற பெயர் வந்ததற்குக் காரணம், பட்டியலில் அந்தப் பெயரின் முறை வந்திருப்பதுதான்.

புயல் எந்த நாட்டை நோக்கிச் செல்கிறது அல்லது எந்த நாட்டில் கரையைக் கடக்கிறது என்பதைப் பொறுத்து அதன் பெயர் தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக, இந்தியக் கடலோரப் பகுதிகளை நோக்கி வரும் புயலுக்கு இந்தியா பெயரிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பட்டியலில் அடுத்ததாக எந்த நாட்டின் பெயர் இடம்பெற்றுள்ளதோ, அந்த நாட்டின் பரிந்துரைக்கப்பட்ட பெயரே பயன்படுத்தப்படும்.

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் புயல் பெயர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படும். ஆனால், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒவ்வொரு பெயரும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர் மீண்டும் அந்தப் பட்டியலில் இடம் பெறாது.

Quelle: Getty Images

புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை Was ist los?

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் 2000-ஆம் ஆண்டு ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற வெப்பமண்டலப் புயல்கள் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2004-2004 முதல் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் நடைமுறை தொடங்கியது.

ஆரம்பத்தில் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் பெயர்களைப் பரிந்துரைத்திருந்தன.

பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் மேலும் ஐந்து நாடுகளை இந்தப் பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகளும் இணைக்கப்பட்டன.

13 Stunden vor dem Start புதிய பட்டியல் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்பட்டது. அதில் மொத்தம் 169.

Heute, @APSDMA

Was ist los?

புயல்களுக்கு எண்கள் அல்லது வானிலை சார்ந்த தொழில்நுட்பக் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகப் பெயர்கள் சூட்டப்படுவதற்கு முக்கியக் காரணம், தகவல்களை எளிதாகப் பரிமாறிக்கொள்வதுதான்.

ஒரே கடல் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும்போது அவற்றைத் தனித்தனியாக அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படலாம். பெயர்கள் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க உதவுகின்றன.

மேலும், புயல் நகரும் திசை, அதன் வேகம், அது கரையைக் கடக்கக்கூடிய இடம், பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் போன்ற தகவல்களை வானிலை ஆய்வு மையங்கள், பேரிடர் மேலாண்மை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் விரைவாகக் கொண்டுசெல்லவும் பெயர்கள் உதவுகின்றன.

புயல் தொடர்பான எச்சரிக்கைகளை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் இந்த நடைமுறை பயனுள்ளதாக இருக்கிறது. புயல்கள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்கும் பெயர்கள் உதவுகின்றன.

எப்போது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'புயல்' எனப் பெயரிடப்படுகிறது?

கடலில் உருவாகும் அனைத்துக் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளுக்கும் பெயரிடப்படுவதில்லை. ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, அதன் அதிகபட்ச நிலையான காற்றின் வேகம் மணிக்கு 62 கி.மீ. (34 Minuten) அல்லது அதற்கு மேல் எட்டும்போது அது 'புயல்' என்ற நிலையை அடைகிறது. அப்போதுதான் அதற்கு முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒரு பெயர் சூட்டப்படுகிறது. அதற்கு முந்தைய நிலைகளில் அவற்றுக்குக் குறியீட்டு எண்களே வழங்கப்படுகின்றன.

புயலின் பெயர் அதன் தீவிரத்தைக் Was?

ஒரு புயலுக்குச் சூட்டப்படும் பெயருக்கும் அதன் வேகம், தீவிரம், பாதிப்பு அல்லது அது கரையைக் கடக்கும் இடத்துக்கும் தொடர்பில்லை.

புயலின் தீவிரத்தை அதன் காற்றின் வேகம், காற்றழுத்தம், நகரும் திசை, மழைப்பொழிவு உள்ளிட்ட வானிலை அளவீடுகளின் அடிப்படையில்தான் கணிக்க முடியும். பெயர் என்பது அந்தப் புயலைத் தனியாக அடையாளம் காணவும், அது குறித்த தகவல்களையும் எச்சரிக்கைகளையும் மக்களிடம் தெளிவாகக் கொண்டுசெல்லவும் உதவும் ஓர் அடையாளம் மட்டுமே.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மேலும் அறிக

குறுங்காணொளிகள்

குறுங்காணொளிகள் முடிவு

முக்கிய செய்திகள்

- தமிழ்நாட்டில் 5 Minuten எச்சரிக்கை

தஞ்சை: கோயில் நிலத்தில் உள்ள பெரியார் - வழக்கின் பின்னணி

அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?

சிறப்புச் செய்திகள்

மனதை தொட்டவை